சி.எல்.சி திவிபல

சி.எல்.சி திவிபல என்பது நாடு முழுவதும் உள்ள சி.எல்.சி வாசனா வாடிக்கையாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவு / திறன்களை வழங்குவதற்கான “தொழில்நுட்ப உதவி நிகழ்ச்சித்திட்டங்கள்” ஆகும்.

இந்த செயற்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்களின் கீழ், சி.எல்.சி திவிபல எங்கள் நுண்கடன் வாடிக்கையாளர்களுக்கு தேவையான தொழில்நுட்ப அறிவு, உதவி மற்றும் நிகழ்நேர பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் அதேசமயம், சாத்தியமான தொழில் வாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு அறிவூட்டுவதற்கான விரிவான பயிற்சிச் செயலமர்வுகளின் தொடர்ச்சியாக செயல்படும்.

இந்த செயற்திட்டம் இலங்கை பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதையும், வலுவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பயிற்சிச் செயலமர்வுகள் தங்கள் சொந்த தொழில்களைத் தொடங்க அவர்களை ஊக்குவிக்கும் தற்போதைய வணிகங்களை மேலும் மேம்படுத்தவும் மற்றும் விரிவுபடுத்தவும் உதவும்.

ஒரு புவியியல் பிரதேசத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தையாவது நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சி.எல்.சி இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வடிவமைத்துள்ளது. அதன்படி, சி.எல்.சியின் ஆரம்பத் திட்டமானது, தேர்ந்தெடுக்கப்பட்ட 31 இடங்களை வெற்றிகரமாக உள்ளடக்கியுள்ளதுடன், ஒவ்வொரு சிறப்புத் துறைகள் தொடர்பான தொழில்துறை நிபுணர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட பலதரப்பட்ட நிபுணத்துவ ஆலோசனை நிகழ்ச்சித்திட்டங்களுடன் வெற்றிகரமாக நடத்தவும் முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டம் இப்போது நாடு முழுவதும் மிக வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.