முதராபா என்பது இரண்டு தரப்பினரிடையான ஒரு கூட்டாண்மை ஆகும், இங்கு ஒரு தரப்பு (நிதி வழங்குநர், முதலீட்டாளர்) ஒரு குறிப்பிட்ட அளவு மூலதனத்தை வழங்குகிறார், மற்றும் முதரிப் (நிதி நிர்வகிப்பாளர் / சி.எல்.சி இஸ்லாமிய நிதிச்சேவைப் பிரிவு), இலாபத்தை ஈட்டும் நோக்கில் நிதிகளை நிர்வகிக்கிறார். இது ஒரு விசேட வகையான கூட்டாண்மை ஆகும், இங்கு ஷரியா இணக்க வணிகங்களில் முதலீடு செய்வதற்காக ஒரு தரப்பினர் மற்றொருவருக்கு பணத்தை கொடுக்கிறார். சம்பாதித்த இலாபம் முதலீட்டாளருக்கும் முதரிபிற்கும் இடையில் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்ட ஒரு முன் நிர்ணயிக்கப்பட்ட இலாப பகிர்வு விகிதத்தில் பிரிக்கப்படும். சி.எல்.சி இஸ்லாமிய வணிகப் பிரிவு கீழே விவரிக்கப்பட்டுள்ள நெறிமுறை ஷரியா இணக்கமான முதலீட்டு தெரிவுகளை வழங்குகிறது.
“வகலா” நிலையான கால முதலீட்டில், முதலீட்டாளருக்கும் சி.எல்.சி இஸ்லாமிய நிதிச்சேவைப் பிரிவுக்கும் இடையில் ஒரு முதன்மை “வகலா” ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. முதலீட்டாளர் தனது சார்பாக “ஷரியா” இணக்கமான முதலீடுகளில் பரஸ்பர முன் ஒப்புக் கொள்ளப்பட்ட இலாப விகிதத்தில் முதலீடு செய்வதற்காக மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் அல்லது முதிர்ச்சியடைந்த முதலீட்டுத் தொகையுடன் சேர்ந்து முதலீடு செய்வதற்காக இஸ்லாமிய நிதிச்சேவைப் பிரிவை ஒரு முகவராக நியமிக்கிறார். முகவர் ஒரு தொகையை மேலதிகமாக (ஒப்புக்கொண்ட இலாப விகிதத்தை விட அதிகமாக) சேமிக்க முடிந்தால், வகலா ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி அவர் அதை ஊக்கத்தொகையாக தன்வசம் வைத்திருக்கலாம்.
குறிப்பு: வகலாவின் குறைந்தபட்ச முதலீட்டு மதிப்பு - ரூபா. 5 மில்லியன் முதல்.