இஸ்லாமிய நிதிச் சேவை தயாரிப்புக்கள்

இஜாரா (குத்தகை)

இது ஒரு குத்தகை ஒப்பந்தமாகும், இதில் சி.எல்.சி இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவு (குத்தகையை வழங்குபவர்) வாடிக்கையாளருக்கு (குத்தகைதாரர்) ஒரு குறிப்பிட்ட நிதி வழங்கல் காலத்திற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டபடி வாடகைக் கொடுப்பனவுக்கு ஈடாக சொத்தை குத்தகைக்கு விடுகிறார். அனைத்து கொடுப்பனவுகளும் செய்யப்பட்டிருந்தால், நிதி வழங்கல் காலத்தின் முடிவில் வாடிக்கையாளருக்கு சொத்தின் உரிமையாண்மையை மாற்றுவதாக இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவு உறுதியளிக்கிறது. இஜாரா ஒரு பயனுள்ள நிதிக் கருவியாகும், இது வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சொத்துக்களை நேரடியாக வாங்குவதற்குப் பதிலாக குத்தகை மூலம் வாங்குவதற்கு இடமளிக்கிறது, இதனால் மூலதன செலவினங்களின் ஒரேயடியான பெரும் சுமையை குறைக்கிறது. இஜாரா சேவை கிடைக்கப்பெறும் மார்க்கங்கள்:

  • வாகனங்கள் (பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத)
  • உபகரணம் மற்றும் இயந்திரங்கள்
  • மற்றும் தொழிற்படு மூலதனத் தேவைகள்.

முராபஹா (வாணிப கடன்)

முராபஹா என்பது ஒரு கடன் வழங்கல் ஏற்பாடாகும், இதன் மூலம் வாடிக்கையாளரின் வேண்டுகோளின்படி ஒரு சொத்தை வாங்க சி.எல்.சி இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவு உடன்படுகிறது. செலவு மற்றும் இலாப பரிவர்த்தனை அடங்கும் வகையில் சி.எல்.சி இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவானது சொத்தின் உரிமையாண்மையை தன்வசம் எடுத்துக் கொள்வதுடன், கடனாக வழங்கிய நிதி மற்றும் இலாபத்தொகையை உள்ளடக்கிய இரு தரப்பும் ஏற்றும்கொள்ளும் விற்பனை விலைக்கு வாடிக்கையாளருக்கு விற்பனை செய்கிறது. முராபஹா என்பது ஒரு சௌகரியமான கடன் வழங்கல் முறையாகும், இது வர்த்தகப் பொருட்களை வாங்குவதற்கும் கிட்டத்தட்ட எந்தவொரு சொத்துப் பிணை கொண்ட கடன் வழங்கலுக்கும் பயன்படுத்தப்படலாம். முராபஹா பின்வருவனவற்றுக்காக வழங்கப்படுகிறது:

  • வாணிப கடன்
  • அசையாச் சொத்து / வாகனங்கள் / இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்தல்

குறையும் தொகை அடிப்படையிலான முஷாரகா (செயற்திட்டம் / சொத்து கடன் மற்றும் தொழிற்படு மூலதனம்)

இந்த தயாரிப்பு குறித்த சொத்தொன்றில் சி.எல்.சி இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவு மற்றும் வாடிக்கையாளரின் கூட்டு உரிமையாண்மையை உருவாக்குவதன் மூலம் கடனுதவியைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்துகிறது. இணை உரிமையாண்மையை உருவாக்கிய பிறகு, சி.எல்.சி இஸ்லாமிய நிதிச் சேவைப் பிரிவு அதன் சொத்தின் பாகத்தை வாடிக்கையாளருக்கு அவ்வப்போது வாடகைக் கொடுப்பனவுகளுக்கு வாடகைக்கு விடுகிறது, இதற்கிடையில் வாடிக்கையாளர் அவ்வப்போது சொத்தில் சி.எல்.சியின் (CLC’s) உரிமைப் பாகத்தை வாங்குவார், அதாவது வாடிக்கையாளர் இப்பரிவர்த்தனை முதிர்வுற்று நிறைவுறும் போது சொத்தின் ஏகபோக உரிமையாளராக மாறுவார்.

சி.எல்.சியின் இஸ்லாமிய வங்கிச் சேவைப் பிரிவு ஆரம்பத்தில் இருந்தே உங்கள் வணிக முயற்சியைத் தொடங்க உங்களுக்குத் தேவையான நிதி உதவியை வழங்குவதில் உங்களுடன் கைகோர்த்துக் கொள்ளும். குறையும் தொகை அடிப்படையிலான முஷாரகா என்பது ஒரு பல்துறை சார்ந்த நிதி கருவியாகும், இது உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான வணிக வடிவங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இது பின்வருவனவற்றுக்கு மிகவும் பொருத்தமானது:

  • சொத்து கொள்வனவு - வாகனம் / அசையாச் சொத்து / உபகரணம் / இயந்திரம்
  • தொழிற்படு மூலதன நிதி வழங்கல்

வகாலா (வணிக மற்றும் தொழிற்படு மூலதன நிதி வழங்கல்)

வாடிக்கையாளரின் தொழிற்படு மூலதன தேவைகளை பூர்த்தி செய்ய, சி.எல்.சி இஸ்லாமிய நிதிச்சேவை வாடிக்கையாளர்களுக்கு வகாலா நிதி வசதியை வழங்குகிறது. வகாலா கருத்தாக்கத்தின் ஆணைக்குள், ஒரு ஒப்பந்தம் என்பது சி.எல்.சியின் (நிதி வழங்குநர் / முதலீட்டாளர்) இஸ்லாமிய வங்கிச்சேவைப் பிரிவு இதன் முதன்மையாளராக இருப்பதுடன், பின்னர் வாடிக்கையாளர் இந்த முதலீட்டிற்கான முகவராக (தொழில்முனைவோர்) நியமிக்கப்படுவார். வகாலா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி முகவருக்கு குறுகிய கால நிதி வழங்கப்படுகிறது, இதில் முதலீடு மற்றும் இலாப வருவாயுடன் திருப்பிச் செலுத்தும் முறைகள் நெகிழ்வானவை. அத்தகைய முதலீட்டு ஒப்பந்தத்தின் கீழ், ஷரியா (Shari’ah) இணக்கமான வணிக நடவடிக்கைகளில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளரின் (investor’s) நிதியை நிர்வகிக்க தொழில்முனைவோருக்கு அதிகாரம் உண்டு, மேலும் ஒரு நிலையான நிர்வாகக் கட்டணத்துடன் (வகாலா கட்டணம்) முதலீட்டாளருக்கு ஒப்புக்கொண்ட விதிமுறைகளின் கீழ் இலாபத்தை ஈடுசெய்ய முடிகிறது. பரஸ்பர முன் ஒப்புக் கொள்ளப்பட்ட இலாப விகிதத்தின் படி வகாலாவின் இலாபம் செலுத்தப்படும். முகவர் மேலதிக தொகையை (ஒப்புக்கொண்ட இலாப விகிதத்தை விட அதிகமாக) ஈட்ட முடிந்தால், வகாலா ஒப்பந்தத்தில் அவருடன் ஒப்புக் கொண்டதைப் போலவே அவர் அதை ஊக்கத்தொகையாக வைத்திருக்கலாம். இது பின்வருவனவற்றுக்கு மிகவும் பொருத்தமானது:
This is ideally suited for:

  • குறுகிய கால வர்த்தகம் மற்றும் தொழிற்படு மூலதன நிதி.